இந்தியா

பாம்புகளை தொட்டு, தூக்கிய பிரியங்கா காந்தி !

பாம்புகளை தொட்டு, தூக்கிய பிரியங்கா காந்தி !

webteam

உத்திரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பாம்புகளை தொட்டு, தூக்கியபடி பழங்குடியின மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 80 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இதனால் இங்கு நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடை பெற்று வருகிறது. தற்போது வரை நான்கு கட்டங்களுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளன. உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 71 வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளது. வரும் 6ஆம் தேதி அமேதி மற்றும் ரேபரேலி உள்ளிட தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவரும், தனது தாயாருமான சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில், பிரியங்கா காந்தி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அப்போது, பாம்பாட்டிகள் அதிகம் வசிக்கும் கிராமத்திற்குச் சென்ற பிரியங்கா, அவர்கள் வைத்திருந்த பாம்புகளை கூடையிலிருந்து எடுத்துப் பார்த்து, அவை குறித்து விசாரித்தார். மேலும் பாம்புகளை தொட்டு, தூக்கியபடி பழங்குடியின மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.