உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு பாரதிய ஜனதாவுடன் தொடர்பு இருப்பதால்தான் அவர்கள் பாதுகாக்கப்படுகின்றனர் என தாம் கேள்விப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
உன்னாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை பிரியங்கா காந்தி நேரில் சந்தித்து ஆதரவு கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உத்தரப்பிரதேசத்தில் குற்றவாளிகளுக்கு இடமில்லை என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறி வருவதாகவும் ஆனால் மாநிலத்தில் பெண்களுக்கு இடமில்லாத சூழ்நிலையை உருவாக்கி இருப்பதாகவும் சாடினார்.
உன்னாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணின் குடும்பத்திற்கு கடந்த ஓராண்டாகவே மிரட்டல்கள் இருந்திருப்பதாகவும் பிரியங்கா குற்றஞ்சாட்டினார்.