இந்தியா

"கருத்துக் கணிப்பால் மனம் தளர வேண்டாம்": பிரியங்கா காந்தி

"கருத்துக் கணிப்பால் மனம் தளர வேண்டாம்": பிரியங்கா காந்தி

webteam

தேர்தல் முடிவு குறித்த கருத்துக் கணிப்புகள் மற்றும் வதந்திகளால் காங்கிரஸ் தொண்டர்கள் மனம் தளர வேண்டாம் என ‌அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஆடியோ பதிவு ஒன்றை பிரியங்கா வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் தொண்டர்களின் உற்சாகத் துக்கு குழிபறிக்கும் வகையில் வதந்திகளும் கருத்துக் கணிப்புகளும் வெளிவந்து கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவற்றால் மனம் தளராமல் காங்கிரஸ் தொண்டர்கள் வாக்கு எண்ணிக்கையில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பிரியங்கா வலியுறுத்தியுள்ளார்.

பாஜக தலைமையிலான ஆட்சி மீண்டும் அமையும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமைதி காத்து வருகிறார். இந்நிலையில், பிரியங்கா காந்தி தொண்டர்களுக்கு ஆடியோ பதிவு வெளியிட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.