இந்தியா

ட்விட்டரில் இணைந்தார் பிரியங்கா காந்தி - 1 மணிநேரத்தில் 25 ஆயிரம் பேர் குவிந்தனர்

ட்விட்டரில் இணைந்தார் பிரியங்கா காந்தி - 1 மணிநேரத்தில் 25 ஆயிரம் பேர் குவிந்தனர்

Rasus

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி ட்விட்டரில் இணைந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவியேற்ற பிறகு முதல்முறையாக இன்று உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் பிரியங்கா காந்தி பங்கேற்றார்‌. திறந்தவெளி வாகனத்தில் நடந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பிரியங்காவுடன் பங்கேற்றார். அப்போது தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனிடையே சமூக வலைத்தளங்களிலும் துரிதமாக செயல்படும் விதமாக பிரியங்கா காந்தி ட்விட்டரில் இணைந்துள்ளார். அவர் ட்விட்டர் கணக்கை தொடங்கிய உடனேயே அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் சரவரவென உயர்ந்தது. வெறும் 15 நிமிடத்தில் அவரை 5000 பேர் பின்தொடர்ந்த நிலையில் 1 மணி நேரத்தில் பிரியங்கா காந்தியை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 25,000 ஆக உயர்ந்தது. அதேசமயம் பிரியங்கா காந்தி தனது சகோதரரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தி உள்பட 7 பேரை ட்விட்டரில் பின்தொடர்கிறார். இதுவரை எந்தப் பதிவையும் அவர் வெளியிடவில்லை.

சமீப காலமாகவே பாஜகவினருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ட்விட்டரில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் படுவேகமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரியங்கா காந்தியின் வரவும் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.