கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு இருவேறு வண்ணத்தில் பள்ளி சீருடைகள் வழங்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் பண்டிக்காடு பகுதியில் உள்ள ஆங்கில நடுநிலைப்பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவர்களையும் சரியாக படிக்காத மாணவர்களையும் பிரித்து காட்டப்படும் வகையில் இரு வேறு சீருடை அறிமுகபடுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. நன்றாக படிக்கும் மாணவர்கள் சாம்பல் நிறத்திலான சீருடையையும், மற்ற மாணவர்கள் வழக்கமான சீருடையையும் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாக மாநில குழந்தைகள் வாரியத்திற்கு புகார் வந்ததுள்ளது. இதற்கிடையில் தனியார் பள்ளியின் இந்த நடவடிக்கைக்கு கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.