இணையவழி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களை தனியார் வங்கிகளான ஹெச்.டி.எஃப்.சி மற்றும் ஐசிஐசிஐ வங்கியும் கேட்டுக் கொண்டுள்ளன.
கொரோனா பரவுவதை தடுக்க பொதுமக்கள் கூட்டமாக இருப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தங்கள் வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை தற்போது குறைத்துள்ளதாக ஹெச்.சி.எஃப்.சி மற்றும் ஐசிஐசிஐ வங்கியும் தெரிவித்துள்ளன. ஊழியர்களின் பணி நேரத்தை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை என குறைத்துள்ளதாக ஹெச்.டி.எஃப்.சி வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் நலன் கருதி வங்கிக் கணக்கு புத்தகத்தில் பதிவிடுதல், அந்நிய செலாவணி வாங்குவது உள்ளிட்ட சேவைகளையும் நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல, தேவையான தூய்மைப் பணிகளை மேற்கொண்டு, குறைந்தளவு ஊழியர்களுடன் வங்கிக் கிளைகள் இயங்கும் என ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் அதிகளவு வங்கிகளுக்கு நேரடியாக வராமல் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு அவ்வங்கிகள் கேட்டுக்கொண்டுள்ளன.