விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிறைக் கைதிகள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத விநாயகர் சிலைகளை தயாரித்துள்ளனர்.
நாசிக் மத்திய சிறையில் இருக்கும் கைதிகளுக்கு பல்வேறு கைத்தொழில்களை செய்யும் வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படுகிறது. அதன்படி, வரும் பத்தாம் தேதி கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்திக்காக வீடுகளில் வைத்து வழிபடும் அளவிலான சிறிய விநாயகர் சிலைகளை அவர்கள் வடிவமைத்துள்ளனர். காகிதக்கூழ் மற்றும் களிமண்ணைக் கொண்டு செய்யப்பட்டுள்ள இவை அனைத்தும், சிறை தயாரிப்புகள் விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வரும் முன்பே, முன்பதிவு முறையில் விற்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.