புதிய 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணிகளை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், புதிய 200 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கள்ளப்பணம் மற்றும் கருப்புப்பணத்தை ஒழிக்கும் நோக்கில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி முதல் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டது. மேலும், 1000 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பணப் பரிவர்த்தனையை மேலும் எளிமையாக்கும் வகையில் புதிய ரூ.200 நோட்டுகள் புழக்கத்தில் விட ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதற்கான பணிகளை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கள்ளநோட்டுக்களை தயாரிக்க முடியாத வகையில் இந்த புதிய 200 ரூபாய் நோட்டுகள் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய 200 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் பணி மைசூரிலும், மேற்குவங்கத்தின் சல்போனியிலும் நடைபெற்று வருகிறது.