இந்தியா

“தேசத்தை கட்டமைக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு”- நாட்டு மக்களுக்கு பிரதமர் உரை 

“தேசத்தை கட்டமைக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு”- நாட்டு மக்களுக்கு பிரதமர் உரை 

webteam

நீதி, நியாயம் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரையாற்றுகையில், “என் மனதில் இருப்பதை நாட்டு மக்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீதி, நியாயம் மீது மக்களுக்கு நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம். உலகிலேயே இந்தியாதான் பெரும் ஜனநாயக நாடாக செயல்பட்டு வருகிறது. அயோத்தி தீர்ப்பு மூலம் புது அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் இந்தியாவின் வலிமையான அமைப்பு என்பது நிரூபணமாகியுள்ளது. 

இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு என்பதற்கு இந்த நாள் சிறந்த உதாரணம். மக்களாட்சி வலிமையாக தொடர்கிறது என்பதை இந்தியா காட்டியுள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த அயோத்தி வழக்கு இன்று இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது. மிக நீண்ட சட்ட நடைமுறை முடிவுக்கு வந்துள்ளது. கர்தார்பூரில் புதிய வழித்தடம் திறக்கப்பட்டுள்ளதுபோல் இங்கும் புதிய பாதை உருவாகியுள்ளது. வேற்றுமையும், எதிர்மறை எண்ணங்களும் மறைந்த தினம் இன்று. புதிய இந்தியாவில் எதிர்மறை எண்ணங்களுக்கு இடமில்லை. தேசத்தை கட்டமைக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு” எனத் தெரிவித்தார்.