இந்தியா

இன்று கேதார்நாத் செல்கிறார் பிரதமர் மோடி

JustinDurai
இந்துக்களின் புனிதத் தலங்களில் ஒன்றான கேதார்நாத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று செல்கிறார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் சிவன் கோயிலில் வழிபாடு நடத்தும் பிரதமர், பின்னர் அங்கு 12 அடி உயர ஆதி சங்கராச்சாரியார் சிலையும் திறந்து வைக்கிறார். 2013ஆம் ஆண்டு பெரு வெள்ளத்தில் ஆதி சங்கரர் சமாதி சேதமடைந்த நிலையில் புனரமைப்பு பணிகளுக்கு பின் அதனை பிரதமர் திறந்து வைக்க உள்ளார். இதுதவிர கேதார்நாத்தில் 400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு கட்டுமான திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். மோடி பிரதமரான பின் கேதார்நாத் செல்வது இது 5ஆவது முறையாகும். அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் உத்தராகண்ட்டும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.