இந்தியா

மாணவர்கள், இளைஞர்களுக்காக பிரதமர் மோடி எழுதும் புத்தகம்

மாணவர்கள், இளைஞர்களுக்காக பிரதமர் மோடி எழுதும் புத்தகம்

webteam

மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில் பிரதமர் மோடி எழுதிய புத்தகம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாக உள்ளது. 

அந்த புத்தகத்தில் பள்ளி மாணவர்கள் தேர்வுகளின்போது ஏற்படும் மனஅழுத்தத்தை எதிர்கொள்வது மற்றும் தேர்வுகள் முடிந்தபிறகு செய்ய வேண்டியது என பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி அலசியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. பெங்குவின் ரேண்டம் ஹவுஸ் எனும் பதிப்பகம் வெளியிடும் அந்த புத்தகம் இந்தாண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, புத்தகம் எழுத எனது மனதுக்கு நெருக்கமான இந்த தலைப்பினை நான் தேர்வு செய்தேன். இளைஞர்களால் வழிநடத்தப்படுகின்ற நாளைய சமுதாயம் என்ற எனது கொள்கையின் அடிப்படை சாரம்சத்துக்கு ஏற்றது இந்த தலைப்பு என்று அவர் தெரிவித்தார். மன் கி பாத் வானொலி நிகழ்ச்சிகளுக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து தனது எண்ணங்களைப் புத்தகமாக எழுத பிரதமர் மோடி முடிவு செய்திருக்கிறார். நாட்டின் பிரதமராகப் பதவி வகிக்கும் ஒருவர் இளைய சமுதாயத்துக்காக புத்தகம் எழுதுவது இந்திய வரலாற்றில் இது முதல் நிகழ்வாகும்.