இந்தியா

விவசாயிகளுக்கு புத்தாண்டு பரிசு - ரூ.20,000 கோடி நிதியை இன்று விடுவிக்கிறார் பிரதமர் மோடி

JustinDurai

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் பத்தாவது தவணையாக விவசாயிகளுக்கு 20,000 கோடி ரூபாய் நிதி உதவிகளை இன்று பிரதமர் நரேந்திர மோடி விடுவிக்கிறார்.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 4 தவணைகளாக 6,000 ரூபாய் பிரித்து வழங்கப்படுகிறது. இந்த நிதி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

இதுவரை 9 தவணைகளாக நிதி உதவி வழங்கப்பட்ட நிலையில் இன்று பத்தாவது தவணையாக சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் பிரித்து வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் இதுவரை 1.6 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.