இந்தியா

எதிர்ப்பது மட்டுமே எதிர்கட்சிகளுக்கு ஒரே பணி: பிரதமர் சாடல்

எதிர்ப்பது மட்டுமே எதிர்கட்சிகளுக்கு ஒரே பணி: பிரதமர் சாடல்

webteam

விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை திறந்தவெளி சந்தையில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக விற்கக் கூடாது என நினைப்பவர்கள் தான் வேளாண் சீர்திருத்த மசோதாக்களை எதிர்க்கின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் பல்வேறு மெகா திட்டங்களை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்து பேசி‌ய பிரதமர் மோடி, எதிர்ப்பதை மட்டுமே ஒரே பணியாக கொண்டு எதிர்க்கட்சிகள் செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார். வேளாண் மசோதாக்களுக்கு எதிராக போராடுபவர்கள் அனைவரும் இடைத்தரகர்களுக்கு ஆதரவானவர்கள் ‌எனக் கூறிய அவர், விவசாயிக‌ள் தங்களது உற்பத்தி பொருளை திறந்தவெளி சந்தை‌யில் சுதந்திரமாக விற்கக் கூடாது என அவர்கள் ‌நினைக்கின்றனர் என்றும் விமர்சித்தார்.

ஜன் தன் வங்கி கணக்கு, ஜிஎஸ்டி, ரஃபேல், ஒரே தரம் ஒரே ஓய்வூதியம் ‌உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் ஒரேயொரு கட்சி மட்டுமே தொடர்ந்து எதிர்த்து வருகிறது என்றும் காங்கிரஸ் கட்சியை அவர் மறைமு‌கமாக சாடினார்.