இந்தியா

'மாறி வரும் உலக சூழல் இந்தியாவுக்கு சாதகம்' - பிரதமர் மோடி

JustinDurai

மாறி வரும் சர்வதேச சூழல் இந்தியாவுக்கு சாதகமாக மாறியிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி தனது 42ஆவது நிறுவன தினத்தை கொண்டாடி வருகிறது. காணொலி முறையில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் பாஜக பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். மாறி வரும் உலக சூழல் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்துள்ள நிலையில் இந்தியா தனது 75ஆவது சுதந்திர ஆண்டை கொண்டாடுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகள் குடும்ப நலன் சார்ந்த அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் பாரதிய ஜனதா தேச நலன் சார்ந்து பணியாற்றி வருவதாக பிரதமர் தெரிவித்தார். திறமை வாய்ந்த இளம் தலைமுறையினர் முன்னேறி வருவதை எதிர்க்கட்சிகள் தடுப்பதாகவும் பிரதமர் விமர்சித்தார். குடும்ப அரசியலின் ஆபத்துகளை விவாத பொருளாக்கி அதை மக்கள் மனதில் பதிய வைப்பதில் பாரதிய ஜனதா வெற்றிபெற்றிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். அரசின் சலுகைகள் கடைக்கோடி குடிமகனுக்கும் சென்று சேர வேண்டும் என்பதே தங்கள் கட்சியின் இலக்கு என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இதையும் படிக்க: இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் யார் யார்? போர்ப்ஸ் வெளியிட்ட புது பட்டியல்!