இந்தியா

ஷாங்காய் மாநாடு: சீனா புறப்பட்டார் பிரதமர் மோடி

webteam

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சீனா செல்கிறார்.

ஷாங்காய் அமைப்பில் முழு நேர உறுப்பினர் அந்தஸ்து இந்தியாவுக்கு கிடைத்துள்ள நிலையில் பங்குபெறும் முதல் கூட்டம் என்பதால் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். சீனாவின் கிண்டாவ் நகரில் இன்று தொடங்கும் மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அப்போது பயங்கரவாத ஒழிப்பு, வர்த்தக மேம்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுறது. 2001ம் ஆண்டு உருவான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த அமைப்பில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கடந்த ஆண்டு நிரந்த உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டது.