இந்தியா

பிரதமர் மோடி - அதிபர் பைடன் இன்று 'மெய்நிகர்' சந்திப்பு

JustinDurai

உக்ரைன் விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகிய இருவரும் இன்று மெய்நிகர் சந்திப்பு மூலம் ஆலோசனை நடத்துகின்றனர்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் அமெரிக்க அமைச்சர்களான லாயிட் ஆஸ்டின், ஆண்டனி பிளிங்கன் ஆகியோரை வாஷிங்டனில் சந்தித்துப் பேச உள்ளனர். அதற்கு முன்னதாக பிரதமர் மோடியும் அதிபர் ஜோ பைடனும் மெய்நிகர் சந்திப்பு மூலம் ஆலோசிக்க உள்ளனர்.

உக்ரைன் விவகாரம், இந்தோ - பசிஃபிக் முழுவதும் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அவர்கள் இருவரும் ஆலோசனை நடத்த உள்ளனர். உக்ரைன் நெருக்கடி தொடர்பாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் பின்னணியில் இந்த மெய்நிகர் சந்திப்பு நடைபெறவிருக்கின்றது.

இதையும் படிக்க: `சாப்பாட்டுக்கே வழியில்ல..’ - கடும் கொரோனா கட்டுபாட்டால் பால்கனி வழியாக உதவிகேட்ட சீனர்கள்