இந்தியா

அடுத்த மாதம் அமெரிக்க அதிபர் பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு

Veeramani

பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அடுத்த மாதம் சந்திக்க உள்ளார்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளின் கூட்டமைப்பான குவாட் அமைப்பின் உச்சி மாநாடு அடுத்த மாதம் ஜப்பானின் டோக்கியோவில் நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடியை தங்கள் நாட்டு அதிபர் ஜோ பைடன் சந்திப்பார் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.



இந்திய பசிபிக் பெருங்கடல் பகுதியை நெருக்கடிகளற்ற, சுதந்திரமான ஒரு பகுதியாக மாற்ற இந்த சந்திப்பு வகை செய்யும் எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்திய பசிபிக் பெருங்கடல் பகுதி நாடுகளில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிகள் செய்து வருவதாக விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையின் இக்கருத்து வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க:'உலகில் ராணுவத்திற்காக அதிகம் செலவு செய்யும் மூன்றாவது நாடு இந்தியா' - ஆய்வறிக்கை