இந்தியா

"வடகிழக்கு மாநிலங்களில் சிறப்புச் சட்டம் படிப்படியாக வாபஸ்" - பிரதமர் மோடி

Sinekadhara

வடகிழக்கு மாநிலங்களில் அஃஸ்பா எனப்படும் பாதுகாப்புப் படையினருக்கான சிறப்புச் சட்டத்தை முழுமையாக விலக்கிக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

1958ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி சிறப்பு ஆயுதப்படை சட்டம் இயற்றப்பட்டது. இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், அசாம், மிசோரம், மேகாலயா, திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களில் அமைதி குறைவான பகுதிகள் என்று சொல்லப்படும் இடங்களில் இந்த சட்டம் வெவ்வேறு ஆண்டுகளில் பல்வேறு பகுதிகளில் அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த சட்டத்தின்மூலம் ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அசாம் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சிறப்புச் சட்டம் குறிப்பிட்ட பகுதிகளில் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் இச்சட்டம் படிப்படியாக அப்பகுதி முழுவதில் இருந்தும் விலக்கிக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.