இந்தியா

கோவா விடுதலை தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி

கோவா விடுதலை தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி

Veeramani

விடுதலை தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக கோவா சென்ற பிரதமர் மோடி, பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

கடந்த 1961ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி போர்ச்சுகீசிய ஆட்சியில் இருந்து கோவா விடுதலை பெற்றது. இந்த நாளை விடுதலை தினமாக கோவா கொண்டாடி வருகிறது. பனாஜியில் நடைபெற்ற விடுதலை தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஆசாத் மைதானத்தில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் பாய்மர அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாய்மர படகுகளின் அணிவகுப்பை கண்டார்.

பின்னர் ஷியாமா பிரசாத் முகர்ஜி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற மோடி, முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து கோவா மருத்துவ கல்லூரியில் சிறப்பு பல்நோக்கு கட்டடம், அகுவாடா கோட்டை சிறை அருங்காட்சியகம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.