காஷ்மீரில் பதட்டம் நீடிக்கும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறைச் செயலர் ராஜிவ் கவுபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், நாடாளுமன்ற தொடர் முடிவடைந்த பின் அமித் ஷா காஷ்மீர் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்கு முன்பாக பிரதமர் மோடியை அமித்ஷா சந்தித்துள்ளார். அப்போது நேற்று நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம் குறித்த தகவல்களை அமித்ஷா தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.