இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம். இதையடுத்து கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார் பாரத பிரதமர் மோடி.
இந்த ஆலோசனை கூட்டம் வரும் திங்கட்கிழமை அன்று நடத்தப்பட உள்ளது. ஆன்லைன் மூலமாக இந்த கூட்டம் காணொளி காட்சி மூலமாக நடக்க உள்ளது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் மற்றும் சுகாதாரத் துறை சார்பில் மூத்த அதிகாரிகளும் பங்கேற்பார்கள் என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 120 நிமிடங்கள் இந்த கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட அனைவருடனும் இந்த தடுப்பூசி விவகாரம் குறித்து விரிவாக பிரதமர் மோடி ஆலோசிப்பார் எனவும் சொல்லப்பட்டுள்ளது.