இந்தியா

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: அருட்தந்தை மீது போக்சோவில் வழக்கு

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: அருட்தந்தை மீது போக்சோவில் வழக்கு

webteam

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக, கேரள பாதிரியார் மீது போக்சா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது கோட்டயில் கோவிலகம். இங்கு ஹோலி கிராஸ் தேவாலயம் உள்ளது. மிகவும் பழமையான இந்த தேவாலயத்தின் அருகில் பள்ளி ஒன்று உள்ளது. 1921 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பள்ளி இது. இங்கு படித்துவந்த மூன்று சிறுமிகளுக்கு, அருட்தந்தை ஜார்ஜ் படயட்டி (68) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள் ளனர். 

பள்ளி அருகிலேயே தேவாலயம் உள்ளது. 9 வயதுள்ள மூன்று சிறுமிகள் அந்த அருட் தந்தையிடம் ஆசி வாங்க சென்றபோது, அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுபற்றி அந்தச் சிறுமிகளில் ஒருவர் பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் ஹெல்ப் லைனில் தகவல் தெரிவித்துள்ளனர். அங்கிருந்து புகார் சென்றதை அடுத்து போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எர்ணாகுளம் அங்கமாலி ஆர்ச் டயோசிசன் செய்தி தொடர்பாளர் அருட்தந்தை பால் கரேண்டன் கூறும்போது, இந்த பாலியல் தொல்லை பற்றிய தகவல் கிடைத்ததுமே அருட்தந்தை ஜார்ஜ், எங்கள் டயோசிசனில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு அவர்களிடம் கூறியுள்ளோம் என்றார்.