இந்தியா

'அரிசி, கோதுமை விலைகள் கட்டுக்குள் உள்ளது' - மத்திய அரசு தகவல்

webteam

உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய போதுமான உணவு தானிய இருப்பு நாட்டில் உள்ளது என்று நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் கோதுமை மற்றும் அரிசியின் விலைகள் தொடர்புடைய ஆண்டுகளில் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்புக்கு ஏற்ப அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்துள்ளது. 2021-22ம் ஆண்டில் விலைகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தன, ஏனெனில் விலைகளைக் கட்டுப்படுத்த ஓ.எம்.எஸ்.எஸ். எனப்படும் வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் மூலம் சுமார் 80 லட்சம் மெட்ரிக் டன்  உணவு தானியங்கள் வெளிச்சந்தையில் ஏற்றப்பட்டன. கோதுமை, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை நிலவரத்தை இந்திய அரசு தொடர்ந்து கண்காணித்து, தேவையான திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னோடி இல்லாத புவி அரசியல் சூழ்நிலையின் காரணமாக, கொள்முதல் குறைவாகவே இருந்தது, எனவே, இந்திய அரசு ஓஎம்எஸ்எஸ் சந்தையில் இதுவரை தலையிடவில்லை. இருப்பினும், அரசு இந்திய விலை சூழ்நிலையை நன்கு அறிந்திருப்பதுடன் வாராந்திர அடிப்படையில் தொடர்ந்து கண்காணிக்கிறது. அரசு மேலும் விலைவாசி உயர்வைத் தவிர்க்க முனைப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 13.05.2022 முதல் கோதுமைக்கும்,  08.05.2022 முதல் அரிசிக்கும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதன்பிறகு, கோதுமை மற்றும் அரிசியின் விலையில் உடனடி கட்டுப்பாடு ஏற்பட்டது. விலைகளைக் கட்டுப்படுத்தவும், சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு எந்தவிதமான சிரமங்களையும் தவிர்க்கும் பொருட்டு, மத்திய அரசு பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தை  மேலும் மூன்று மாதங்களுக்கு டிசம்பர் 2022 வரை நீட்டித்துள்ளது. நாட்டின் ஏழைகள் வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் எந்தவிதமான கஷ்டத்தையும் சந்திக்காமல், சந்தையின் பாதகமான நிலையிலிருந்து அவர்களைத் தடுக்க வேண்டும். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி கூடுதல் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான உணவு தானியங்களின் இருப்பு மத்திய தொகுப்பில் இருப்பதையும், விலைகள் கட்டுக்குள் இருப்பதையும் மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

இதையும் படிக்க: 'தமிழ்நாட்டிற்கு வட்டியில்லா கடனாக ரூ.3,500 கோடி’- அமைச்சர் பிடிஆர் தகவல்