வணிக சிலிண்டர்
வணிக சிலிண்டர் முகநூல்
இந்தியா

மேலும் குறைந்தது வணிக சிலிண்டரின் விலை!

PT WEB

முன்னெப்போதும் இல்லாத வகையில் இரண்டு தினங்களுக்கு முன், வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையை 200 ரூபாய் குறைத்தது மத்திய அரசு.

சமையல் எரிவாயு உருளையின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் மாற்றி அமைத்து வரும்நிலையில், மாதத்தின் முதல் நாளான இன்று சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து அறிவித்துள்ளன.

அந்த வகையில் செப்டம்பர் ஒன்றாம் தேதியான இன்று வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் ரூ 157.50 காசுகளை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. இதனையடுத்து, ரூ.1,852.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் ரூ. 1,695 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளன.

வணிக சிலிண்டர்

கடந்த பல மாதங்களாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் ஏற்றம், இறக்கம் இருந்து வந்த நிலையில், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. இதை கருத்தில்கொண்டு கடந்த 2 நாட்களுக்கு முன் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 14.2 கிலோ கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 200 ரூபாய் குறைத்து, ரூ. 918.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.