உடல்நல குறைவால் அவதிப்பட்டு வரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சந்திக்கவுள்ளார்.
மோடி தலைமையிலான முந்தைய மத்திய அரசில் மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் அருண் ஜெட்லி. இவர் இந்தாண்டு துவக்கத்திலிருந்து உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று மீண்டும் நாடு திரும்பினார். எனினும் இவர் தனது உடல் நல பிரச்னையில் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. கடந்த 9ஆம் தேதி ஜெட்லிக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதால், அவர் டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று இவரை நேரில் சந்திக்க இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அருண் ஜெட்லியின் உடல்நிலை சற்று மோசமானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அருண் ஜெட்லியை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.