ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய புனிதத் தலங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்.
உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ளது பத்ரிநாத் மற்றும் கேதார்நாத். புனிதத் தலங்களான இந்த இடங்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சென்றார். அங்குள்ள கோவில்களில் அவருக்காக சிறப்பு வழிப்பாடுகள் நடத்தப்பட்டன. மாநில ஆளுநர் டாக்டர் கே.கே.பால் மற்றும் மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் ஆகியோர் உடனிருக்க, குடியரசுத் தலைவர் கேதார்நாத்தில் ருத்ராபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்தார். மகா விஷ்ணுவின் தலமான பத்ரிநாத்தில் தனி பூஜைகள் செய்து வழிப்பட்டார். அவர் தனது இரண்டு நாள் உத்தராகண்ட் மாநிலப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று புது தில்லி திரும்புகிறார்.