இந்தியா

5 மாநிலங்களுக்கு ஆளுநர் நியமனம்

5 மாநிலங்களுக்கு ஆளுநர் நியமனம்

webteam

தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆளுநர்களை நியமித்துள்ளார்.

தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித், மேகாலாயாவுக்கு கங்கா பிரசாத், அருணாச்சலப் பிரதேசத்துக்கு பி.டி.மிஸ்ரா, பீகாருக்கு சத்யபால் மாலிக், அஸ்ஸாமிற்கு ஜகதீஷ் முகி ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பெரிய மாநிலங்களில் ஒன்றான தமிழகத்துக்கு முழுநேர ஆளுநர் நியமிக்கப்படாதது ஏன் என்று பல்வேறு தரப்பிலும் கேள்வி எழுப்பப்பட்டு வந்தன. எதிர்க்கட்சிகள் இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து எழுப்பி வந்த நிலையில், தமிழகத்துக்கு புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார்.