இந்தியா

இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் உட்பிரிவுகளை கண்டறிய ஆணையம்: குடியரசுத் தலைவர்

webteam

இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் உட்பிரிவுகளை கண்டறிவதற்கான ஆணையத்தை குடியரசுத் தலைவர் ராம்‌நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் உள்ள உட்பிரிவுகளை கண்டறிந்து மத்தியப் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. அதன்படி அதற்கான ஆணையத்தை குடியரசுத் தலைவர் ராம்‌நாத் கோவிந்த் நியமித்துள்ளார். அதன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ரோஹினி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அந்த ஆணையத்தின் உறுப்பினர்களாக ஜே.கே.பஜாஜ் உள்ளிட்ட மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் உட்பிரிவுகளை கண்டறியும் ஆணையம் மூலம், அந்தப் பிரிவுகளை சேர்ந்த ஏராளமானோருக்கு அரசு பணிகளிலும், கல்வி நிலையங்களிலும் வாய்ப்பு கிடைக்கப்பெறும் என, குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.