இந்தியா

குடியரசு தின கொண்டாட்டம்: தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!

குடியரசு தின கொண்டாட்டம்: தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!

webteam

அரசியல்சாசனம் அமலுக்கு வந்த நாளான ஜனவரி 26ஆம் தேதி, குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, நாட்டின் 71ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி ராஜபாதையில் இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடியை ஏற்றினார். பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார். குடியரசு தினவிழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வையொட்டி தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக தலைநகர் டெல்லியிலுள்ள அரசு கட்டடங்கள் மூவண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.

குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்ற கட்டடம், இந்தியா கேட், மத்திய அரசின் தலைமைச்செயலக கட்டடம் உள்ளிட்டவை வண்ண விளக்குகளால் ஜொலித்தன. இதேபோன்று மும்பை, கொல்கத்தா, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களிலும் புராதன கட்டடங்கள் மூவண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன