வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டு வாங்குவதற்கு விரும்பினால் ஆதாரை இணைக்க வகை செய்யும் சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
வங்கி கணக்குத் தொடங்கவும், சிம் கார்டு வாங்கவும் ஆதாரை விருப்பப்பட்டவர்கள் இணைக்க வகை செய்யும் சட்டத்துக்கு மத்திய அமைச்ச ரவை அனுமதி அளித்தது. இந்த சட்ட மசோதா, மாநிலங்களவையில் நிறைவேறவில்லை. ஆனால் மக்களவையில் நிறைவேறியது.
இதைத் தொடர்ந்து இதுதொடர்பான அவசர சட்டத்தை பிறப்பித்த மத்திய அரசு இதற்கு, ஒப்புதல் பெற குடியரசு தலைவருக்கு அதை அனுப்பி வைத்தது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.