இந்தியா

ஜனாதிபதி தொடங்கிய, ’மகளுடன் செல்ஃபி’!

ஜனாதிபதி தொடங்கிய, ’மகளுடன் செல்ஃபி’!

webteam

மகளுடன் செல்பி (Selfie with Daughter) என்ற புதிய மொபைல் செயலியை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார். 

பெண் சுதந்திரம் என்று பலரும் பேசி வந்தாலும் ஆங்காங்கே பெண் சிசுகொலை அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. எனவே, பெண் சிசு கொலை மற்றும் பாலியல் உள்ளிட்ட வன்கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புதிய ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 

ஹரியானா மாநிலத்தில் உள்ள பிபிபூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுனில் ஜக்லன். இவர், கடந்த 2015ம் ஆண்டு பெண்களின் வளர்ச்சிக்காகவும், அவர்களின் முன்னேற்றவும் பல்வேறு பிரச்சாரங்களையும், திட்டங்களையும் மேற்கொண்டார். அதன்படி, இவர் 'Selfie with Daughter'என்ற செயலியை உருவாக்கினார். இந்த மொபைல் ஆபில், பெண் குழந்தையை பெற்றவர்கள் மகளுடன் இணைந்து செல்பி எடுத்து அதை இந்த ஆப்பில் பதிவு செய்யலாம். இதன் மூலம் பாலினம் குறித்த ஏற்றத்தாழ்வு குறையும். இந்த மொபைல் செயலியை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்து, சுனில் ஜக்லனுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.