இந்தியா

"பிரணாப்பின் உடல் நிலை மோசமடைந்துள்ளது" ராணுவ மருத்துவமனை அறிக்கை !

"பிரணாப்பின் உடல் நிலை மோசமடைந்துள்ளது" ராணுவ மருத்துவமனை அறிக்கை !

jagadeesh

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் ஏற்பட்ட கட்டியை அகற்ற டெல்லி ராணுவ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் ராணுவ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ள பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் "பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளது. அவருக்கு இப்போதும் நுரையீரல் தொற்றும் ஏற்பட்டிருக்கிறது. அவர் தொடர்ந்து வெண்ட்டிலேட்டரில் வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை மருத்துவக் குழுவினரால் கொடுக்கப்பட்டு வருகிறது" என ராணுவ மருத்துவமனை விளக்கமளித்து இருக்கிறது.