இந்தியா

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா

webteam

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

85 வயதான முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணா முகர்ஜி வழக்கமான உடல்நல பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதுவரை அவருக்கு எந்த கொரோனா அறிகுறிகளும் இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரணாப் முகர்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், “கடந்த வாரம் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதனை மேற்கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.