இந்தியா

பிரகாஷ் ராஜ் மீதான விமர்சனம்: சமூக வலைதளத்தில் இருந்து நீக்கினார் பாஜக எம்பி

பிரகாஷ் ராஜ் மீதான விமர்சனம்: சமூக வலைதளத்தில் இருந்து நீக்கினார் பாஜக எம்பி

webteam

நடிகர் பிரகாஷ் ராஜை தனிப்பட்ட ரீதியில் சமூகவலைதளத்தில் விமர்சித்த பாரதிய ஜனதா எம்பி, அந்த பதிவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து அகற்றியுள்ளார்.

கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் பிரதமர் மோடி மௌனமாக இருப்பதாக பிரகாஷ் ராஜ் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலாக அவர் மீது தனிப்பட்ட ரீதியில் பாரதிய ஜனதா மைசூர் எம்பி பிரதாப் சிம்ஹா விமர்சித்தார். இதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பிரகாஷ் ராஜ் அவருக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்நிலையில்  ட்விட்டர் வலைதளத்தில் பிரகாஷ் ராஜை விமர்சித்து பதிவிட்டிருந்ததை பாரதிய ஜனதா எம்பி பிரதாப் சிம்ஹா நீக்கியுள்ளார்.

இதை குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரகாஷ் ராஜ், சமூக வலைதளத்தில் இருந்து அகற்றினாலும் மக்கள் நினைவில் இருந்து அந்த பதிவுகளை நீக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார். நடப்பவை அனைத்தையும் மக்கள் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து  பிரதாப் சிம்ஹா  நீக்கிய அந்த பதிவுகள் தன்னிடம் இருப்பதாகவும், தேவைப்பட்டால் அவருக்கு தரத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.