மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர் இன்று பொறுப் பேற்றார்.
இந்தியாவின் பிரதமராக, நரேந்திர மோடி இரண்டாவது முறையாக கடந்த 30 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 25 கேபினேட் அமைச்சர்கள், 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர்களின் இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதில் ராஜ்நாத் சிங்குக்கும் பாதுகாப்புத் துறையும் பாஜக தலைவர் அமித் ஷாவும் உள்துறையும் நிர்மலா சீதாராமனுக்கு நிதிதுறையும் ஒதுக்கப் பட்டுள்ளது.
பிரகாஷ் ஜவடேகருக்கு மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றத் துறை ஒதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் அமைச்சராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அந்த துறையின் இணை அமைச்சராக பாபுல் சுப்ரியோவும் பொறுப்பேற்றார்