இந்தியா

நாடாளுமன்ற பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் இருந்து பிரக்யா சிங் தாக்கூர் நீக்கம்

Rasus

பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இருந்து பிரக்யா சிங் தாக்கூர் நீக்கப்பட்டுள்ளார்.

‘நாதுராம் கோட்சே’ ஒரு தேசபக்தர் என நேற்று நாடாளுமன்றத்தில் பிரக்யா சிங் தாக்கூர் கூறினார். இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு அவர் மீது நடவடிக்கையும் எடுத்துள்ளது.

அதன்படி பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இருந்து பிரக்யா சிங் தாக்கூர் நீக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார்.