இந்தியா

வைரலான ‘நிர்வாண பார்ட்டி’ போஸ்டர்: போலீசார் விசாரணை

வைரலான ‘நிர்வாண பார்ட்டி’ போஸ்டர்: போலீசார் விசாரணை

webteam

நிர்வாண பார்ட்டி நடக்க இருப்பதாக ஒட்டப் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

கோவாவின் வடக்குப் பகுதியில், நிர்வாண பார்ட்டி நடக்க இருப்பதாகவும் இதில் 10-15 வெளிநாட்டு பெண்களும் பத்துக்கும் மேற்பட்ட இந்தியப் பெண்களும் கலந்துகொள்ள இருப்பதாகவும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. எங்கு எப்போது நடக்க இருக்கிறது என்கிற விவரம் அந்த போஸ்டரில் இடம்பெறவில்லை. இந்த பார்ட்டி போஸ்டர், சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலானது. 

இதையடுத்து கோவா மாநில மகிளா காங்கிரஸ் தலைவர் பிரதிமா கோட்டின்ஹோ, முதலமைச்சர் பிரமோத் சாவந்தும் சுற்றுலாத்துறை அமைச்சர் மனோகரும் இதுபோன்ற நிகழ்ச்சி நடக்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

உஷாரான போலீசார், தங்கள் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். ’கோவாவில் எந்த நிர்வாண பார்ட்டியையும் அனுமதிக்க மாட்டோம்’ என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.