இந்தியா

கேரள வாக்குச்சாவடிகளில் புகுந்த வெள்ளம் - பொதுமக்கள் அவதி 

கேரள வாக்குச்சாவடிகளில் புகுந்த வெள்ளம் - பொதுமக்கள் அவதி 

webteam

கேரளாவில் பெய்துவரும் கனமழையால், 5 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. 

கேரளாவில் எர்ணாகுளம் உள்ளிட்ட 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக,‌ பல இடங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. எர்ணாகுளம் தொகுதியில் உள்ள சில வாக்குச்சாவடிகளில், முழங்கால் அளவுக்கு தண்ணீர் நிற்கின்றது. சாலைகளில் எங்கும் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஆனால் மழை சிரமத்தையும் பொருட்படுத்தாமல், மக்கள் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இதனிடையே மழையால் பாதிக்கப்பட்டுள்ள எர்ணாகுளத்தில், வாக்குப்பதிவை ஒத்திவைக்க வேண்டும் என பெரும்பாலான அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில், கேரள தலைமைத் தேர்தல் அதிகாரி அதனை நிராகரித்துள்ளார்.