இந்தியா

தொடங்கியது டெல்லி சட்டப்பேரவை தேர்தல்

தொடங்கியது டெல்லி சட்டப்பேரவை தேர்தல்

webteam

டெல்லி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. பாதுகாப்பு பணியில் டெல்லி காவல்துறையை சேர்ந்த 40 ஆயிரம் காவலர்களும், மத்திய ஆயுதப்படையின் 190 கம்பெனிகளும், 19 ஆயிரம் ஊர்க் காவல் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். யமுனை நதியில் படகு மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தலில் வாக்களிக்க ஒரு கோடியே 47 லட்சத்து 3 ஆயிரத்து 692 பேர் தகுதி பெற்றுள்ள நிலையில், 13 ஆயிரத்து 750 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 3 ஆயிரத்து 704 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. அதில் ஐந்து வாக்குச்சாவடிகள், போராட்டம் நடைபெற்று வரும் ஷாகீன் பாக் பகுதியில் அமைந்துள்ளன.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 11ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. டெல்லியில், 100 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 132 பேர் உள்ளனர். இவர்களில் வாக்களிக்க வருவோரை கவுரவிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. வர இயலாத சூழலில் உள்ளவர்களை வாக்குச் சாவடிகளுக்கு அழைத்துவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.