பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா வரும் 10ஆம் தேதி வரவிருப்பதை அடுத்து தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ’முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தது முதல் கொடநாடு வழக்கு வரை தமிழக மக்களுக்கு சந்தேகங்களை ஏற்படுத்துவதால் காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம். கொடநாடு வழக்கு தொடர்பாக காவல்துறையினர் மேற்கொள்ளும் விசாரணை தன்மையை பொறுத்தே, சிபிஐ விசாரணை தேவையா என்பது பற்றி கருத்து கூற முடியும்’ என அவர் தெரிவித்தார்.