முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவு நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று காலை குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி, துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவர்களை தொடர்ந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரும் ராஜிவ் காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.