இந்தியா

பேரணியில் தள்ளுமுள்ளு- தடுப்புகளை விவசாயிகள் தூக்கி வீசியதால் பதட்டம்

webteam

விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி விவசாயிகள் சென்ற பேரணி உத்தரப்பிரதேச மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்படுள்ளது.

கடன் தள்ளுபடி, வேளாண் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வடமாநில விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது பேரணியாக சென்ற பல்லாயிரக்கணக்கான வடமாநில விவசாயிகள் டெல்லி அருகே உள்ள காசியாபாத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் விவசாயிகள் பேரணியை கலைக்க முயற்சி செய்த அதிரடிப்படை காவல்துறை தடுப்புகளை அமைத்து தடுத்தனர். ஆனால் காவல்துறையால் அவர்களை கட்டுபடுத்த முடியவில்லை. பின் விவசாயிகளை கலைக்க கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசினர். இதனைத்தொடர்ந்து டிராக்டர்களை கொண்டு மோதி தடுப்புகளை அகற்ற விவசாயிகள் முயற்சி செய்தனர். இதனைதொடர்ந்து அசம்பாவிதங்களை தடுக்க எல்லையில் ஏராளமான அதிரடிப்படை காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.