இந்தியா

பொது இடத்தில் குடித்தால் சிறை

Rasus

கோவாவில் உள்ள பொது இடங்களில் யாரேனும் இனி மது அருந்தினால் சிறையில் அடைக்கப்படுவார்கள் என போலீஸ் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக வடக்கு கோவாவின் போலீஸ் கண்காணிப்பாளர் கார்த்திக் காஷ்யப், பொது இடங்களில் யாரேனும் மது அருந்துவதை கண்டால் உடனடியாக கைது செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஐபிசி பிரிவு 34-ன் கீழ் இவர்கள் கைது செய்யப்படுவார்கள். மேலும் பொதுமக்கள் யாரேனும் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவரை கண்டால் உடனடியாக போலீஸ்-க்கு தகவல் கொடுக்குமாறும் அப்போதுதான் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களை விரைவில் கைது செய்ய முடியும் எனவும் கார்த்திக் காஷ்யப் கூறியுள்ளார்.

நாட்டின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்களில் கோவாவும் ஒன்று. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பொது இடங்களில் சிலர் மது அருந்துவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், போலீசார் தற்போது இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.