கர்நாடகாவில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபரை காவல் துறையினர் சுட்டுக் கொன்றனர். ஹூப்பள்ளி பகுதியில் வீட்டு வேலை செய்யும் பெண்மணி ஒருவரின் 5 வயது மகள் காணாமல் போனார். அருகே இருந்த, பயன்பாட்டில் இல்லாத ஒரு கட்டடத்தில், குழந்தை உயிரிழந்து கிடந்தது.
உடலை கூராய்வு செய்தபோது, குழந்தை பாலியல் வன்கொடுமை
செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. அக்குழந்தையை, ஒரு நபர், தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றினர்.
சம்பந்தப்பட்டவரை கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். விசாரணையில், குழந்தையைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது பிஹாரைச் சேர்ந்த ரித்தேஷ்குமார் என தெரியவந்தது.
அவரைத் தேடிச் சென்றபோது, ரித்தேஷ், காவல் துறையினரை கல் வீசித் தாக்கியதாகவும், இதனால், துப்பாக்கியால் சுட்டபோது அவர் உயிரிழந்ததாகவும் காவல் துறையினர் கூறுகின்றனர்.