உத்தரப்பிரதேச மாநிலம் கனௌச் மாவட்டத்தில் திருடப்பட்ட எருமையை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க போலீசார் மாற்று யோசனையை எடுத்துள்ளனர்.
அந்த மாவட்டத்தில் அமைந்துள்ள அலிநகர் பகுதியை சேர்ந்த வீரேந்திரா மற்றும் தர்மேந்திரா என இருவரும் திர்வா போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் தனது எருமையை திருடி விட்டதாக புகார் கொடுத்தனர்.
அதனால் எருமையின் உண்மையான உரிமையாளர் யார் என அறிய முடியாமல் திணறிய போலீசார் வழக்கை முடித்துவிட கொஞ்சம் மாற்றி யோசித்தனர்.
இறுதியில் அந்த பொறுப்பை எருமையிடம் ஒப்படைத்துவிட்டனர் போலீசார்.
அதனால் எருமையை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வீரேந்திரா மற்றும் தர்மேந்திரா என இருவரையும் எதிரெதிரே நிற்க வைத்து, அதனை கூப்பிட சொல்லியுள்ளனர். அதில் தர்மேந்திராவிடம் எருமை சென்றதும் அவர் தான் எருமையின் உண்மையான உரிமையாளர் என சொல்லி போலீசார் அவரிடமே அதனை ஒப்படைத்துள்ளனர்.