இந்தியா

எப்.ஐ.ஆர் பதிவு செய்ய 16 வயது சிறுமியை நடனமாடுமாறு கட்டாயப்படுத்திய போலீஸ்?

எப்.ஐ.ஆர் பதிவு செய்ய 16 வயது சிறுமியை நடனமாடுமாறு கட்டாயப்படுத்திய போலீஸ்?

EllusamyKarthik

(கோப்பு புகைப்படம்)

உத்தரபிரதேச மாநிலம் தபேலி பகுதியில் உள்ள கோவிந்த் நகரில் வாடகை வீட்டில் தன் குடும்பத்தோடு வாழ்ந்து வந்துள்ளார் 16 வயது சிறுமி ஒருவர். 

அந்த பகுதிகளில் உள்ள கோயில் விசேஷங்களில், பஜனை செய்யும் தொழிலை அந்த சிறுமியின் குடும்பத்தினர் செய்து வந்துள்ளனர். 

இந்நிலையில் அவர் குடியிருந்த வீட்டின் உரிமையாளரின் மருமகன் அனுப் யாதவ், சிறுமியின் குடும்பத்தை அங்கிருந்து காலி செய்யும்படி வற்புறுத்தி வந்துள்ளார். சமயங்களில் அனுப் யாதவ் இரவு நேரங்களில் சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து களையும் செய்துள்ளார். 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனுப் யாதவ், தன்னை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக கோவிந்த் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சிறுமி சென்றுள்ளார். 

அங்கிருந்த காவல் ஆய்வாளர் அனுராக் மிஸ்ரா சிறுமியை விசாரித்ததோடு அனுப் யாதவ் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய தனக்கு முன்னாள் நடனமாடுமாறு கட்டாயப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.சிறுமியும் ஆய்வாளர் முன் நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விசாரணை என போலீசார் தன் மகளை காவல் நிலையம் அழைத்து சென்று நடனமாட சொல்லி கட்டாயப்படுத்தியதாக காவலர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளார் சிறுமியின் தாய்.

கோவிந்த் நகர் காவல் நிலைய வட்ட ஆய்வாளர் விகாஸ் குமார் பாண்டே தெரிவித்துள்ளது ‘ஏற்கனவே சிறுமியின் குடும்பம் மற்றும் வீட்டு உரிமையாளர் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

அவர்களது குற்றச்சாட்டுகளில் எந்தவித முகாந்திரமும் இல்லை என்று தெரிகிறது. காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அந்த வீடியோவை வைரல் செய்ததாக தெரிகிறது. இருப்பினும், இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது’ என்றார்.