மோனோஜித் மிஸ்ரா ndtv
இந்தியா

கொல்கத்தா சட்ட மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. ’எல்லாமே திட்டமிட்ட மிரட்டல்’ வெளியான பகீர் தகவல்!

தெற்கு கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியில் 24 வயது சட்ட மாணவி ஒருவர், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

தெற்கு கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியில் 24 வயது சட்ட மாணவி ஒருவர், கடந்த ஜூன் 25ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ’மாம்பழம்’ என்று அழைக்கப்படும் முன்னாள் மாணவர் மோனோஜித் மிஸ்ரா (31), தற்போதைய மாணவர்கள் புரோமித் முகர்ஜி மற்றும் ஜைத் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளனர்.

மோனோஜித் மிஸ்ரா

இந்த நிலையில் போலீசாரின் விசாரணையில் தற்போது மேலும் சில புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, ”பாதிக்கப்பட்ட மாணவியை மோனோஜித் பாலியல் வன்புணர்வு செய்ததை, அவரது நணபர்களான பிரமித்தும் ஜைப்புவும் வீடியோ எடுத்துள்ளனர். மேலும், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், பயந்துபோய் அந்த மாணவி யாரிடமும் சொல்ல மாட்டார் என்று இருந்துள்ளனர்.

குறிப்பாக, அவர் போலீஸிடம் செல்ல மாட்டார் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளனர். தவிர, மாணவியை நோட்டமிட்டப்படியும் இருந்துள்ளனர். கல்லூரியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கஸ்பா காவல் நிலையத்தைக் கண்காணித்த அவர்கள், பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளிக்கிறாரா என்று பார்க்க மோனோஜித் சில நண்பர்களை வைத்திருந்துள்ளார். மேலும், மோனோஜித் ஒரு கல்லூரி ஊழியரை அழைத்து, ’போலீசார் வளாகத்திற்கு வந்தனரா’ என்று கேட்டுள்ளார். இதற்கிடையே அந்தப் பெண் புகார் அளித்ததற்குப் பிறகு போலீசார் தன்னைப் பின்தொடர்வதையும் மோனோஜித் உணர்ந்துள்ளார்.

மோனோஜித் மிஸ்ரா

இதையறிந்து அவர், தனது வழக்கறிஞர் நண்பர்கள் மற்றும் கல்லூரி சீனியர்களை அழைத்து உதவி கேட்டுள்ளார். ஆனால் யாரும் தலையிடவில்லை. அதன்பிறகே, அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். முன்னதாக, கல்லூரியில் சேர்ந்த நாளிலிருந்தே அந்த மாணவிக்கும் மோனோஜித்துக்கும் பகை இருந்ததாக கூறப்படுகிறது. விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், அந்த மாணவி ஒருநாள் பழிவாங்கப்படலாம் என மோனோஜித் அவரது நண்பர்களிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது" என போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.