இந்தியா

சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திற்கு ட்விட்டரில் கொலை மிரட்டல்: போலீசார் வழக்குப்பதிவு

webteam

முன்னாள்  மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு ட்விட்டரில் கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். இவரது மகன் கார்த்தி சிதம்பரம், தற்போது சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் விரைவில் மரணம் நெருங்கிவிட்டதாகவும், அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் எனவும் கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த ராமநாதன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார்.

இதையறிந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருணா நகரைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர் பழனியப்பன் என்பவர், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் சுந்தரமகாலிங்கம் தலைமையிலான போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.