இந்தியா

சட்டவிரோத போதைப் பார்ட்டி : 161 ஆண்கள், 31 பெண்கள் கைது

சட்டவிரோத போதைப் பார்ட்டி : 161 ஆண்கள், 31 பெண்கள் கைது

webteam

சட்டவிரோத இரவு நேர போதைப் பார்ட்டியில் ஈடுபட்ட சுமார் 200 பேர் நொய்டாவில் கைது செய்யப்பட்டனர்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள நொய்டா நகரத்தில் நேற்றிரவு சட்டவிரோத இரவு நேர போதைப் பார்ட்டி நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், பண்ணை வீட்டில் நடந்த இரவு நேர போதை பார்ட்டியை சுற்றி வளைத்தனர். அந்த பார்ட்டியில் பங்கேற்றிருந்த 161 ஆண்கள் மற்றும் 31 பெண்களை கைது செய்தனர். அத்துடன் 31 போதைப் பொருள் பயன்படுத்தி குடுவைகள், 112 பீர் பாட்டில்கள் மற்றும் 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இந்த பார்ட்டியை நடத்தியதற்காக அமித் தியாகி, பங்கஜ் ஷர்மா, அத்நன் அகமத், பாலதேஷ் கோலி மற்றும் கபில் சிங் ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டவர் 161 ஆண்கள் மற்றும் 31 பெண்களில் பெரும்பாலானோர் டெல்லியை சேர்ந்தவர்கள் என்பதும், குறைந்த நபர்களே நொய்டாவை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. பார்ட்டியை நடத்தியவர்கள் மீது இந்திய சட்டப்படி பல பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.