இந்தியா

பிரதமருக்கும் 'கால் டிராப்' பிரச்னை!

பிரதமருக்கும் 'கால் டிராப்' பிரச்னை!

webteam

பேசிக்கொண்டிருக்கும்போதே தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படும் பிரச்னையால் பிரதமர் மோடியும் அவதிப்பட்டிருக்கிறார். அதனால் அந்த பிரச்னையை சரி செய்யுமாறும் கூறியுள்ளார்.

போனில் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென தொடர்பு துண்டிக்கப்படுவது நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்று. சாதாரண மக்கள் மட்டுமல்ல, பிரதமர் மோடிக்கும் இந்த பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. பிரதமர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு செல்வதற்குள் அடிக்கடி தொடர்பு துண்டிக்கப் பட்டுள்ளது. 

சமீபத்தில் செயலாளர்களுடன் மோடி உரையாற்றிய போது, வாடிக்கையாளர்கள் சந்தித்து வரும் கால் ட்ராப் (call drop) பிரச்னைக்கு தொழில் நுட்ப ரீதியிலான தீர்வு காணுமாறு தொலைதொடர்பு துறை செயலாளரிடம் கூறியுள்ளார். 

இது தொடர்பாக தொலை தொடர்பு நிறுவனங்களிடம் எவ்வளவு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் மோடி கேட்டுள்ளார். முறையான சேவை வழங்காத தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அதிக அபராதம் விதிக்கும் வகையில் ட்ராய் சில விதிமுறைகளை கொண்டு வந்ததாகவும், ஆனால் தொலை தொடர்பு நிறுவனங்கள் அதனை ஏற்க மறுப்பதாகவும் தொலைதொடர்பு துறைசெயலாளர் பதில் அளித்துள்ளதாக தெரிகிறது. அதற்கு தொலை தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார்.